Jump to content

விக்கிமேனியா 2026 (Wikimania 2026)

From Wikimania
This page is a translated version of the page 2026:Program and the translation is 42% complete.
Outdated translations are marked like this.


நிகழ்ச்சித் திட்டத்திற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்குரிய காலக்கெடு மார்ச் 1, 2026 வரை உள்ளது.

சமர்ப்பிப்புகள் அனைத்தும் விக்கிமேனியா 2026-இன் கருப்பொருளை ஒட்டியே அமைந்திருக்க வேண்டும். ஒவ்வொரு சமர்ப்பிப்பும் ஒரு தனித்துவமான கருப்பொருள் தடம், பல்வேறு வடிவங்களில் ஏதேனும் ஒன்றின் கீழ் அமைந்திருக்க வேண்டும். எங்களது தேர்வு அளவுகோல்களையும் நீங்கள் சரிபார்க்கலாம்.

திட்டக் குழுவை நீங்கள் wikimania@wikimedia.org மணிக்குத் தொடர்பு கொள்ளலாம்.. தயவுசெய்து முதலில் எங்களது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பாருங்கள்!

போட்டிக்கான கருப்பொருள்

இந்த வழிகாட்டி விக்கிமேனியா 2026 இல் பங்கேற்பதற்கான திட்டத்தைச் சமர்ப்பிக்க விரும்பும் நபர்களுக்கானது. இயக்கத்தின் மதிப்புகளுக்கு விசுவாசமாக ஒரு வளமான திட்டத்தை உருவாக்குவதற்கான தத்துவம், தேர்வு அளவுகோல்கள், பங்கேற்பு நடைமுறைகளை இது விவரிக்கிறது.

எங்களின் நோக்கம்

அனைத்து விக்கிமேனியா மாநாடுகளைப் போலவே, இதற்கும் ஒரு கருப்பொருள் வரையறுக்கப்பட்டுள்ளது: Liberté, Équité, Fiabilité (சுதந்திரம், சமத்துவம், நம்பகத்தன்மை).

இந்தக் கருப்பொருளே ஒவ்வொரு சமர்ப்பிப்பிற்கும் வழிகாட்டும் கொள்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இதுவே 2026 மாநாட்டின் மிக முக்கியமான அடிப்படையாகும். இது வெறும் முழக்கம் மட்டுமல்ல. சுதந்திர கலைக்களஞ்சியமும் அதன் சூழல் அமைப்பும் அரசியல், ஊடக சவால்களை எதிர்கொண்டு வரும் இவ்வேளையில், 'அறிவு, சமத்துவம், சுதந்திரத்தைப் பாதுகாப்பது' பற்றி சிந்திப்பதற்கான ஒரு கட்டமைப்பாகும்.

எங்களின் ஈடுபாடுகள்

  • பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு: வழக்கமான கல்விசார் மாநாடுகளின் படிநிலை முறையிலிருந்து விலகிச் செயல்படும் உரிமையை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். ஒரு படைப்பு அல்லது சமர்ப்பிப்பு, பொருத்தமான வடிவத்தின் மூலம் சரியான பார்வையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அறிவு பகிரப்பட வேண்டும் என்பதே முக்கியமானது என்பதை மனதில் வைத்து, உங்கள் திட்டத்திற்கு எது சிறந்த வடிவம் என்பதை நீங்களே சிந்திப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒவ்வொரு வகை அமர்வையும் அதன் தரம், சிறப்பின் அடிப்படையில் பார்வையாளர்கள் சமமாகவே கருதுவார்கள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.
  • பங்கேற்பில் சமத்துவம்: விக்கிமீடியா இயக்கம் பன்முகத்தன்மையும் மாறுபாடுகளும் கொண்டது. இந்தப் பன்முகத்தன்மை பிரதிபலிக்கப்பட வேண்டும் என்றும், பங்கேற்பதற்கான சம வாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கும் செயல்பாட்டில் சமத்துவத்தை உறுதி செய்வதற்காக, நிகழ்ச்சித் திட்டங்களுக்கான அழைப்பிற்கு முன்னதாகவே நிதியுதவிக்கான (புலமைப்பரிசில்) அழைப்பைத் தொடங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதன் பொருள், எவரும் தங்கள் முன்மொழிவைச் சமர்ப்பிப்பதற்கு முன்பே நிதியுதவி முடிவுகள் தெரிந்துவிடும்; இது அனைவரும் தங்கள் பங்கேற்பை (நேரடியாகவோ அல்லது இணையவழியாகவோ) சமமான அடிப்படையில் திட்டமிட அனுமதிக்கும்.
    • சமர்ப்பிப்புகளைத் தேர்வு செய்யும்போது, மாநாட்டின் நான்கு மொழிகளுக்கும் (ஆங்கிலம், அரபு, பிரெஞ்சு, இசுபானிசு) நாங்கள் சமமான முக்கியத்துவம் அளிப்போம்.
    • ஒரு படைப்பைச் சமர்ப்பிக்கும் எண்ணம் என்பது, கல்வி உதவித்தொகை (scholarship) குழுவின் தேர்வு முறையில் ஒரு தீர்மானிக்கும் காரணியாக இருக்கவில்லை. இதன் மறுதலையும் உண்மையே: அதாவது, கல்வி உதவித்தொகை பெற்றிருப்பது மட்டுமே நிகழ்ச்சித் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான ஒரு காரணியாக அமையாது.
    • ஒரு நபருக்கு அதிகபட்சம் 3 சமர்ப்பிப்புகள் என்ற வரம்பை நாங்கள் நிர்ணயித்துள்ளோம். இது ஒரு நபர் பங்கேற்கும் நிகழ்வுகளையும் மூன்றாகக் கட்டுப்படுத்துகிறது. பேச்சாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், பங்கேற்பில் கூடுதல் சமத்துவத்தை வழங்குவதே இதன் பின்னணியில் உள்ள நோக்கமாகும்.
  • நம்பகத்தன்மையும் தரமும்: ஒவ்வொரு நபரும் திருப்தியுடன் செல்லும் வகையில் ஒரு தரமான நிகழ்ச்சித் திட்டத்தை உருவாக்குவதே எங்களது இலக்கு. உங்கள் முன்மொழிவுகளின் நம்பகத்தன்மை மீது நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையே இந்த நிகழ்ச்சித் திட்டத்தை உருவாக்க எங்களுக்கு உதவும். இதற்கு உள்ளடக்கத்தின் அடிப்படையில் உயரிய அளவிலான துல்லியம் (rigor) தேவைப்படுகிறது. அதே நேரத்தில் நீங்கள் உங்கள் படைப்பை உருவாக்கவும், தயார் செய்யவும், வழங்குவதற்கும் தேவையான ஆதரவையும் நாங்கள் வழங்குகிறோம்.
  • கூட்டு உருவாக்கம் (Co-construction): விக்கிமேனியா என்பது ஒரு சங்கமம். அறிவை மிகவும் விரிவான, சமத்துவமான முறையில் பகிர்வதைச் சாத்தியமாக்க, ஒரே மாதிரியான முன்மொழிவுகளை (Proposals) ஒன்றாக இணைக்கும் உரிமை எங்களுக்கு உண்டு. எங்களது விக்கித் திட்டங்களின் அதே உணர்வோடு, ஒரு புதிய படைப்பை நீங்கள் இணைந்து உருவாக்குவதற்கு (Co-construct) வழிவகை செய்வதே எங்களது உறுதிப்பாடாகும்.

2026-ஆம் ஆண்டின் கருப்பொருளை ஆழமாகப் புரிந்துகொள்ளுதல்

உங்கள் முன்மொழிவை கருப்பொருளோடு ஆழமாக இணைக்க உதவும் வகையில், அமைப்பாளர்கள் அதைக் காணும் விதம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

மதிப்பு உங்கள் சமர்ப்பிப்புகளுக்கான பொருள், சாத்தியமான கோணங்கள் (சான்றுகள்)
சுதந்திரம் அடிப்படைச் சுதந்திரங்களை ஆராய்தல்: உலகளாவிய பங்கேற்பு, வெளியீட்டு சுதந்திரம், இலவச உரிமங்கள் (Free licenses), புனைபெயர் பயன்பாடு (Pseudonymity), சங்கங்கள் அமைப்பதற்கான சுதந்திரம், கண்டுபிடிப்புகள். ஆரோக்கியமான, திறந்தவெளியைப் பராமரிக்க உங்கள் பணி எவ்வாறு பங்களிக்கிறது?
சமத்துவம் சம வாய்ப்புகளுக்கு அப்பாற்பட்டு, தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப நியாயமான வசதிகளை வழங்குவதே இதன் நோக்கமாகும். உண்மையான உலகளாவிய அறிவிற்காக உங்கள் பணி எவ்வாறு அணுகல்தன்மையை (accessibility) உறுதி செய்கிறது, பாகுபாடுகளைக் (bias) களைகிறது, ஆரோக்கியமான, பாதுகாப்பான சூழலுக்கு உத்தரவாதம் அளிக்கிறது?
நம்பகத்தன்மை சரிபார்க்கும் தன்மை (Verifiability), உண்மைத்தன்மை, நடுநிலைமை ஆகியவற்றை முன்னிலைப்படுத்துதல். ஆதாரங்களின் (Sources) பங்கு என்ன? தகவல் நம்பகத்தன்மைக்கு எதிரான தாக்குதல்களை எதிர்கொண்டு, இந்த இயக்கத்தின் நிலைத்தன்மையையும் (sustainability) ஒருமைப்பாட்டையும் (integrity) எவ்வாறு உறுதிப்படுத்துவது?

தேர்வு அளவுகோல்கள்

தேர்வுக் குழுவானது பின்வரும் அம்சங்களின் அடிப்படையில் முன்மொழிவுகளை மதிப்பீடு செய்யும் (முக்கியத்துவத்தின் வரிசைப்படி):

Rank Criteria Scoring Scale Weighting
1 கருப்பொருளுடனான தொடர்பு, பொருத்தப்பாடு: 'சுதந்திரம், சமத்துவம், நம்பகத்தன்மை' ஆகிய கருப்பொருள்களுடனான தொடர்பு மிகவும் முக்கியமானது. இந்தக் கருப்பொருள்களைத் தாண்டிய பிற தலைப்புகளாக இருந்தாலும், அவை விக்கிமீடியா இயக்கத்திற்கு மிகவும் பொருத்தமானதாக (Relevant) இருக்கும் பட்சத்தில் அத்தகைய முன்மொழிவுகளையும் நாங்கள் வரவேற்கிறோம். From 1 (insufficient response) to 5 (comprehensive and well-reasoned response) ×1.5
2 இயக்கத்தின் மீதான ஆர்வம்: ஒரு திட்டம் விக்கித் திட்டங்கள், மொழிகள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய தன்மை (replicability) அல்லது பிறருக்கு உத்வேகம் அளித்தல் ஆகியவற்றில் எந்த அளவுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அந்த அளவுக்கு அது தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். விக்கிமேனியா பார்வையாளர்களுக்கு இந்த உள்ளடக்கம் எவ்வளவு முக்கியமானது? From 1 (insufficient response) to 5 (comprehensive and well-reasoned response) ×1.4
3 முயற்சியின் தரம் (Quality of intention): அறிவைப் பகிர்ந்துகொள்வதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம். ஒரு விக்கி கட்டுரையைப் போலவே, உங்கள் முன்மொழிவு (Proposal) கூட்டு முயற்சியின் மூலம் மாற்றமடைவதற்கு நீங்கள் எவ்வளவு நெகிழ்வுத்தன்மையுடனும் (flexible) வெளிப்படையாகவும் இருக்கிறீர்கள்? இந்தத் தலைப்பில் உங்களது நிபுணத்துவம் என்ன? From 1 (insufficient response) to 5 (comprehensive and well-reasoned response) ×1.3
4 புதுமையும் தனித்தன்மையும்: அறிவு பகிரப்படும் விதத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதை நிரூபிக்க, புதிய உள்ளடக்கங்கள் அல்லது வடிவங்கள் (formats) வரவேற்கப்படுகின்றன. இது ஒரு தனித்துவமான, அசல் அமர்வா? இது அந்தத் தலைப்பைப் பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்தவோ அல்லது விரிவுபடுத்தவோ உதவுகிறதா? இது ஒரு புதிய படைப்பா அல்லது பேச்சாளர் ஒவ்வொரு மாநாட்டிலும் மீண்டும் மீண்டும் வழங்கும் அதே படைப்பா? உள்ளடக்கம் வழங்கப்படும் விதம் தனித்துவமாக உள்ளதா? From 1 (lack of originality) to 5 (unprecedented) ×1.2
5 தகவலின் நம்பகத்தன்மை: பகிரப்படும் தகவலின் உறுதித்தன்மைக்கும் (solidity), அதேபோல் முன்வைக்கப்படும் திட்டத்தின் தாக்கம் (impact), அதனை மற்றவர்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் (replication) ஆகியவற்றிற்கும் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்துவோம். From 1 (insufficient response) to 5 (comprehensive and well-reasoned response) ×1.1
6 உள்ளடக்கம் மற்றும் வடிவத்தின் பொருத்தப்பாடு: முன்மொழியப்படும் அமர்வின் வகை (Type of session), அந்த உள்ளடக்கத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
  • உதாரணம்: ஒரு புள்ளிவிவர ஆய்வின் (Quantitative study) முடிவுகளை விளக்குவதற்குச் 'சுவரொட்டி' (Poster) வடிவம் மிகவும் ஏற்றது.
  • உதாரணம்: ஒரு நடைமுறைச் சாத்தியமான, பிறர் பின்பற்றிச் செய்யக்கூடிய (replicable) திட்டத்தை விளக்குவதற்குப் 'பயிற்சிப் பட்டறை' (Workshop) வடிவம் மிகச்சரியாக இருக்கும்.
From 1 (one-of-a-kind project) to 5 (project with a very high likelihood of replicability) ×1

ஒரே மாதிரியான நோக்கம் கொண்ட இரண்டு படைப்புகளை (Presentations) வேறுபடுத்திப் பார்ப்பதற்கான அளவுகோல்கள்:

Criteria Scoring Scale Weighting
மொழியும் "பிராங்கோபோனியும்" (பிரெஞ்சு மொழி பேசும் உலகம்) – மாநாடு நடைபெறும் இடத்திற்கு ஏற்ப, பிரெஞ்சு மொழியில் அமைந்த படைப்புகளுக்கும், பிரெஞ்சு மொழி பேசும் உலகம் சார்ந்த அல்லது அது தொடர்பான படைப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படலாம். 0 (other language) to 1 (French) ×1
உறுதித்தன்மை (Solidity)– இந்த உள்ளடக்கமானது முன்வைக்கப்படும் விதத்தில் சீரானத் தன்மையுடன் (coherent) உள்ளதா அல்லது தொடர்பற்றுச் சிதறிக் கிடக்கிறதா? இந்த முன்மொழிவு சுவாரசியமானதாகவும், நன்கு திட்டமிடப்பட்டதாகவும் இருக்கிறதா? பேச்சாளர் இந்தப் படைப்பைத் திறம்பட வழங்குவார் என்பதைக் கொடுக்கப்பட்டுள்ள பின்னணித் தகவல்கள் (background information) உணர்த்துகின்றனவா? From 1 (no experience) to 3 (proven experience) ×1
First time – We know that people who have participated in the conference many times are more likely to have their proposals accepted. When proposals are of equal quality, people who have never presented at Wikimania will be given greater consideration for selection. 0 (no, I’ve presented before) to 1 (yes, this is my first time) ×2

Each submission is evaluated by three people.

கருப்பொருள் தடங்கள் (Thematic tracks)

மதிப்பீட்டுக் குழுவினர் (Evaluation teams) இன்னும் சிறப்பாக ஆய்வு செய்வதற்காக, இம்முறை குறைவான தடங்களே (tracks) இருக்கும் வகையில் நோக்கம் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த காலங்களின் சமர்ப்பிப்புப் போக்குகளைப் பிரதிபலிக்கும் விதமாக, முந்தைய பதிப்புகளில் இருந்த சில கருப்பொருள்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இவை புதிய போக்குகளையும் கருத்தில் கொள்கின்றன. அனைத்துத் தடங்களும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை.

முன்மொழியப்பட்ட தடம் வரையறை சேர்ப்பதற்கான குறிப்புகளும் யோசனைகளும்
1 கல்வியும் பரப்புரையும் இயக்கத்தைப் பற்றி வெளி உலகிற்கு எடுத்துரைத்தல்
2 GLAM-ம் கூட்டாண்மைகளும் நிறுவனங்களுடனான கூட்டாண்மைகள் (கலாச்சாரம், பாரம்பரியம் சார்ந்த நிறுவனங்கள், அல்லது பிற நிறுவனங்கள்)
3 தொழில்நுட்பம் விக்கித் திட்டங்களைச் செயல்பட வைக்கும் அனைத்துக் காரணிகளும் (MediaWiki, நீட்டிப்புகள் (extensions), மூன்றாம் தரப்புச் சேவைகள், கேசெட்டுகள், இசுகிரிப்ட்கள், சர்வர்கள், வடிவமைப்பு, பயனர் அனுபவம்/பயனர் இடைமுகம் (Design & UX/UI) போன்றவை)
4 செயற்கை நுண்ணறிவு செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த அனைத்தும் சமூகத்தின் செயல்பாடு (Community dynamics), உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மை (Content reliability), புதிய கருவிகள் போன்றவற்றுக்கான தாக்கத்தை இது உள்ளடக்கலாம்.
5 சமூகம் பன்முகத்தன்மை, உள்ளடக்கம், பங்களிப்பாளர்/சமூக ஈடுபாடு, சமூக ஆரோக்கியம்
6 ஆராய்ச்சி Research dedicated to Wikimedia communities இந்தத் தடம் (track), பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் விக்கிமீடியாவின் விரிவுபடுத்தப்பட்ட சமூகத்தைச் சந்திப்பதற்கான ஒரு களமாகும். இந்தத் தடத்திற்கு எனத் தனியாகச் சமர்ப்பிப்பு கோரிக்கை (Call for submissions) உள்ளது, இருப்பினும் பின்னணி அல்லது இணைப்பு எதையும் பொருட்படுத்தாமல் அனைவரும் சமர்ப்பிக்கவும் பங்கேற்கவும் வரவேற்கப்படுகிறார்கள்.
7 நிர்வாகமும் உத்தியும் "நிர்வாகம், உத்தி (Governance and Strategy) குறித்த அனைத்தும்
8 விசித்திரமான யோசனைகள் / அதிரடிச் சிந்தனைகள் பிற அனைத்தும் எதிர்பாராதவையும்
9 புதிய தலைமுறை வயதில் மட்டுமின்றி, பங்களிப்பிலும் இளையவர்கள் புதிய தலைமுறையினரை இலக்காகக் கொண்ட முன்னெடுப்புகளை (சான்றிற்கு CEE யூத் குரூப், விக்கிடியா (Vikidia), அல்லது சிக்பீடியா (Txikipedia)) முன்னிலைப்படுத்துவதுடன், விக்கிப்பீடியாவிற்குப் புதியவர்களாக வருபவர்களுக்கான (Newcomers) அனைத்து முயற்சிகளையும் இது உள்ளடக்கும்.

வடிவங்கள்

முகவுரை

வடிவம் எதுவாக இருந்தாலும், பின்வரும் நிபந்தனைகள் பொருந்தும்:

  • உங்களின் முன்மொழிவு நிகழ்ச்சி நிரல் குழுவால் (Program Committee) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • பல்வேறு நபர்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதால், ஒரு நபர் அதிகபட்சமாக மூன்று அமர்வுகளில் மட்டுமே பங்கேற்க முடியும் (பயிற்சிப் பட்டறையின் 'Resource Person' அல்லது 'Meetup/Lunch' ஒருங்கிணைப்பாளராக இருப்பது இதற்கு விதிவிலக்கு).
  • சமர்ப்பிக்கப்பட்ட ஒரு முன்மொழிவின் வடிவத்தை மாற்றும் உரிமை அமைப்பாளர்களுக்கு உண்டு.
  • தேவைப்பட்டால் ஒரு அமர்வின் கால அளவை மாற்றும் உரிமை அமைப்பாளர்களுக்கு உண்டு.
  • அனைத்து அறைகளிலும் வீடியோ புரொசெக்டர் வசதிகள் இருக்கும். கருப்பொருளுக்குப் பொருத்தமாகவும், வடிவமைப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டும் எதை வேண்டுமானாலும் வழங்க உங்களுக்குச் சுதந்திரம் உண்டு.

சுவரொட்டி (நிரந்தரக் காட்சி)

நீங்கள் ஒரு சிறந்த திட்டத்தை முடித்து, அதன் முடிவுகளை விக்கிமேனியாவிற்குத் தெரியப்படுத்த விரும்புகிறீர்களா? ஒரு சுவரொட்டியைச் சமர்ப்பிக்கவும்.

அமைப்பாளர்கள் வழங்கும் வார்ப்புருவைப் (Template) பயன்படுத்தி நீங்கள் சுவரொட்டியை வடிவமைக்க வேண்டும்.

அமைப்பாளர்களே அதை அச்சிட்டு மாநாடு முழுவதும் காட்சிப்படுத்துவார்கள்.

சுவரொட்டி ஆய்வு அமர்வின் போது பார்வையாளர்களின் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கலாம்.

தேவைகளும் நிபந்தனைகளும்:

  • அச்சிடுவதற்காக அமைப்பாளர்கள் குறிப்பிடும் தேதிக்குள் உங்கள் சுவரொட்டியைச் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் சொந்த சுவரொட்டியை நீங்களே கொண்டு வர முடியாது.
  • நேரில் கலந்து கொள்பவர் ஒருவரை உங்கள் சார்பாகப் பேச ஏற்பாடு செய்யாவிட்டால், இணையம் வழியாகச் சுவரொட்டியை விளக்க முடியாது.

மின்னல் உரை (5 நிமிடங்கள்)

நீங்கள் ஒரு அற்புதமான திட்டத்தை முடித்து விக்கிமேனியா அதைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? மின்னல் பேச்சு ஒன்றைச் சமர்ப்பிக்கவும். உங்கள் படைப்புகளை ஆக்கபூர்வமான முறையில் முன்வைக்க உங்களுக்கு 5 நிமிடங்கள் இருக்கும்.

தேவைகளும் நிபந்தனைகளும்:

  • அதிகபட்சம் இரண்டு பேர் இணைந்து வழங்கலாம்.
  • மாநாட்டிற்கு முன்பாக ஒரு ஆயத்த அமர்விலும், மாநாட்டின் போது நடைபெறும் ஒத்திகைகளிலும் நீங்கள் பங்கேற்க வேண்டும்.
  • விக்கிமேனியாவின் போது திரையில் காட்டப்படும் முதன்மை விளக்கக்காட்சியில் சேர்க்கக்கூடிய வகையில் அமைப்பாளர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் உங்கள் இறுதி விளக்கக்காட்சிப் பொருட்களை சமர்ப்பிக்கவும்.

ஆராய்ச்சித் தடம் (Research track) 5+5 நிமிடங்கள் கொண்ட ஒரு குறிப்பிட்ட மின்னல் உரை (Lightning talk) வடிவத்தைக் கொண்டுள்ளது. இந்த 5+5 வடிவத்தை வேறு எந்தத் தடத்திற்கும் பயன்படுத்தும் முன்மொழிவுகள், தரமான 5 நிமிட மின்னல் உரையாகவே வகைமாற்றம் செய்யப்படும்.

குழு விவாதம் (சுமார் 60 நிமிடங்கள்)

ஒரே கருப்பொருளில் வெவ்வேறு நபர்களை ஒன்றிணைக்கும் திட்டம் உங்களிடம் உள்ளதா? அதன் முடிவுகளை விக்கிமீடியா இயக்கத்தில் எப்படிப் பயன்படுத்தலாம் என்று விவாதிக்க இது ஏற்றது.

தேவைகளும் நிபந்தனைகளும்:

  • ஒருங்கிணைப்பாளர் (Moderator) ஒருவரும், குறைந்தது இரண்டு விருந்தினர்களும் இருக்க வேண்டும். அங்கு கூடியிருக்கும் ஒவ்வொரு நபரும் விரும்பினால் ஒரு குறுகிய விளக்கக்காட்சியை வழங்கலாம்.
  • ஒரே நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் 50%-க்கும் அதிகமாக இருக்கக்கூடாது.
  • இந்தக் குழு விவாதத்தில் (Panel) பங்கேற்பாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பேர், விவாதத்திற்குப் பிந்தைய உரையாடல்களை எளிதாக்குவதற்காக நிகழ்விடத்தில் (On-site) நேரடியாக இருக்க வேண்டும். காணொளி வாயிலாக (Video-conference) பங்கேற்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைப்பாளர்களிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • முந்தைய, அடுத்த அமர்வுகளுடன் 5 நிமிட மாற்றத்தைக் கருத்தில் கொள்ளுங்கள்.

பயிற்சிப் பட்டறை (சுமார் 60 அல்லது 90 நிமிடங்கள்)

நீங்கள் உருவாக்கிய கருவி அல்லது திட்டத்தைப் பிறருக்குப் பயிற்றுவிக்க விரும்பினால் இதைத் தேர்வு செய்யவும். பங்கேற்பாளர்கள் ஒரு புதிய திறமையுடன் மாநாட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

தேவைகளும் நிபந்தனைகளும்:

  • உங்கள் சமர்ப்பிப்பில், இந்த பயிலரங்கின் போது நீங்கள் அடைய விரும்பும் குறிக்கோள்களை பட்டியலிடுங்கள்ஃ என்ன திறன்கள் மேம்படுத்தப்படும்?
  • பயிலரங்கிற்கு தலைமை தாங்கும் நபர்கள், பயிலரங்கின் சில அம்சங்களை எளிதாக்க உதவும் வகையில் வளப் பணியாளர்களை அழைக்கலாம். அங்கு கூடியிருக்கும் ஒவ்வொரு நபரும் விரும்பினால் ஒரு குறுகிய விளக்கக்காட்சியை வழங்கலாம்.
  • பயிலரங்கிற்கு தலைமை தாங்கும் நபர் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். இருப்பினும், அறிவை எளிதாக்க அல்லது பங்களிக்க உதவும் எந்தவொரு வள நபர்களும் ஆன்லைனில் இருக்கலாம்.
  • முந்தைய, அடுத்த அமர்வுகளுடன் 5 நிமிட மாற்றத்தைக் கருத்தில் கொள்ளுங்கள்.

Pre-conferences (half day or full day)

Bring together Wikimedia communities, affiliates, and partners for workshops, strategy discussions, technical collaboration, and capacity-building before the main conference.

Pre-conferences offers a mix of formal and informal sessions—rehearsals, edit-a-thons, meetups, and governance meetings—that help set the tone for the full Wikimania experience. Most pre-conferences sessions are organized by established groups or organizations.

The organizers will provide a place for the attendees for half a day, or a full day. All other aspects of the pre-conference are organized by the group who requested this pre-conference, including: announce the pre-conference, find attendees and speakers, manage invitations, create an agenda, organize activities, etc.

Conditions:

  • A pre-conference must be requested from the organizers, using the session submission process.
  • A pre-conference is a gathering of users or friends of our movement. Please indicate who your pre-conference targets, and what would be the number of attendees.
  • A person attending Wikimania in person must be designated as the point of contact with the organizers.
  • The group managing the pre-conference is responsible for inviting participants, managing the program, facilitating remote participation, etc. The organizers provide a room (and catering for full-day sessions); they do not provide video recording nor live translation for the pre-conferences.
  • Requesting pre-conference doesn't count in the 3 submissions per person limit.

If you want to submit a proposal for an existing pre-conference, please contact that pre-conference's organizers.

Confirmed pre-conferences


Meetups & Lunches (~60 minutes)

Meetups and Lunches are themed gatherings organized by formal or informal groups within the Wikimedia movement. They are used to discuss specific topics. Lunches take place during lunchtime.

This year, meetups are fully integrated into the official Wikimania program.

Meetups will be themed by day, as much as possible:

  • Day 1: Themed meetings (WLM, OSM, etc.)
  • Day 2: Geographic and linguistic meetings
  • Day 3: Other

Conditions (apply to both Meetups and Lunches):

  • A meetup must be requested from the organizers, using the session submission process.
  • A person attending Wikimania in person must be designated as the point of contact with the organizers.
  • Meetups and lunches have a limited number of slots, which are allocated on a first-come, first-served basis.
  • Please indicate in the submission form the number of potential attendees and the session type you prefer (lunch or meetup).
  • Requesting a meetup or a lunch doesn't count in the 3 submissions per person limit.

Confirmed Meetups and Lunches

Other types of formats

It is possible to submit a presentation that don't fit the pre-defined ones above, using the "Other" format type in the submission form.

The default time allocation is 60 minutes, but a different time can be requested.

The organizers reserve the right to create or consider other types of formats, or to propose changes to certain formats.

FAQ

General questions

What is the current timeline for submissions?
The submission form will remain open until March 1. The results are scheduled to be published early May.
The submission form for the Research track will remain open until March 31.
I'd like to submit a proposal for the hackathon. How can I do this?
The hackathon has its own program. Please contact the hackathon team.
I can't find the option to submit a talk. Is it normal?
This year, the organizing team has decided to devote more time to practical and interactive sessions; we prefer to focus on these rather than lectures. If you have completed a project that you would like to share, please submit it in the form of a poster (which will be displayed throughout the event) or a lightning talk.
Is it possible to submit a lecture? Can we have a lecture during a workshop or a panel?
This year, the intention is to have practical and hands-on sessions rather than traditional lectures. Short lectures are welcomed during workshops or panel sessions, as introductions, as long as they are not taking over the entire session. If you'd like to offer a panel, the "other" session type welcomes your proposal.
Which sessions types are limited by the 3 submission per person limit?
Posters, Lightning talks (including the specific formats for the Research track), Panels, Workshops and anything listed under "Other" in the submission form.
Pre-conferences, Meetups and Lunches are the only session types with no limitation. Some specific limitations apply to Workshops, as listed below.
  • Being an official participant to a Panel count for one submission. Please list all panelists names in your submission.
  • Being invited as a speaker counts for one submission, even if you haven't created the submission or participated to its setup.
  • The host(s) of a workshop may ask people to come and help with the practical aspects, as experts. These helpers are not allowed to be "present on stage" or formally present anything. This helper role does not count towards the limit of 3, but hosting or presenting does.
I'd like to suggest a tour or a social activity. Should I use the submission form?
Please use the submission form to suggest tours that would help attendees to improve their skills. Using the submission form, we can centralize all suggestions. Have a look at the Tours and Side Events page.
For panels, how does the "same organization" limit works? Can I invite members of different cultural institutions from the same city?
We define roughly "same organization members" as "working, or actively volunteering, for the same organization". However, civil servants (public officials) are in a different situation and we consider them as being from a different organization as long as they work for different institutions. Two librarians from the same library are working for the same organization, even when working in different services. But two librarians working for two different libraries are not considered as from the same organization. If these libraries are in the same city, please prove that they cover different fields.
If my session is accepted, will I get a scholarship or a funding?
No. The scholarships have already been attributed. You need to self-fund your attendance (travel, hotel, entry fee, etc.).


About the submission form

Can I have a look at the different fields in the submission form?
Can I copy the submission form on my device to prepare my submission?
All questions are available on wiki.
Remember that the only way to submit a proposal is through the form!
When I use the submission form, I can't save my draft if I don't fill all mandatory fields. Can it be changed?
We invite you to fill the form with "to be completed" placeholders before saving as a draft. This way we'll know that your session is not ready yet. You can edit your session until the deadline, even if already submitted.
Regarding the question "Is it the first time you present on Wikimania?" Does that mean that one of the answers will be considered more positive than the other?
In the interest of fairness, we want to make it easier for people who have not yet presented anything for the main Wikimania program to attend. We will use this parameter to ensure a good balance between people with Wikimania experience, who are more likely to have their proposals accepted, and people who are attending for the first time.
Note: if you have already presented something at a Wikimania pre-conference, you can still check the “first time” box.
Can I choose my attendance (being remote or on site) and change it afterwards?
It would help us if you select the way you are more likely to attend. You have until the call for submission ends to provide a firm answer, by editing your proposal.
Is it possible submit your pre-recorded videos too, following the program guidelines for any hybrid set up? If yes, will that be through the same submission process?
Please submit your proposal. If selected, we will check with you on the format. No need to record something in advance!
Can I share my draft on Eventyay with someone else?
It is not possible to share a proposal for reading or co-editing. If you want to prepare a proposal with others, it is advised to use an external service to draft. All questions from the submission form are listed on wiki.


About the selection process

If I choose a given format, could the organizers ask me to change it?
If the organizers request a change for the format I selected, is this decision final?
If I'm asked to merge my session with another one, is this decision final?
The Program Team may suggest a change in format. This suggestion is made in order to reflect and decide together on the best format for a presentation idea. The Program Team retains the final decision.
This also applies to presentation mergers.
Has the review committee been fully formed? Haven't seen the call for reviewers.
The review committee was formed during Spring 2025. The committee has 25 members from numerous communities and wikis, linked by the French language. They've been involved in the definition of this year's program as well.


Orientation sessions

Orientation sessions are offered to help you prepare your submission to the program. During these sessions, the theme, intent, and formats will be presented. We will also answer your questions.

All presentations will be recorded and made available on this page. The FAQ will be expanded with the questions asked during the sessions.

Macro program

The following table is a draft. It may change until June 1st, 2026.

Time bands Tuesday 21 July Wednesday 22 July Thursday 23 July Friday 24 July Saturday 25 July
Morning Hackathon Team challenges Day trips (optional tourism) Pre-conferences Hackathon Team Challenges Day 2 Wikimania Conferences Hackathon (no challenges) Wikimania Conferences

11:00 - keynote or panel Liberté (Freedom)

Hackathon (no challenges) Wikimania Conferences

11:00 - keynote or panel Équité (Equity)

Hackathon (no challenges) Wikimania Conferences

11:00 - keynote or panel Fiabilité (Reliability)

Afternoon Hackathon Team Challenges touristic tours or pre-conference workshops Hackathon Team Challenges Showcase

End of the Hackathon Team Challenges at 15:30

Wikimania Conferences Hackathon (no challenges) Wikimania Conferences Hackathon (no challenges) Wikimania Conferences Hackathon (no challenges) Wikimania Conferences
16:00 - Wikimania Opening ceremony Wikimania closing ceremony
Evening to be determined Opening party Closing ceremony party