2024:உதவித்தொகை

From Wikimania
This page is a translated version of the page 2024:Scholarships and the translation is 95% complete.
Outdated translations are marked like this.
Results announced

Wikimania 2024 Scholarships

All applicants have been notified about the outcome of their submission. Please check your e-mail and Spam folder. You can see the scholarship outcomes on a designated page.

உதவித்தொகையின் வகைகள்

உதவித்தொகை என்பது விக்கிமேனியா 2024 இல் நேரில் கலந்து கொள்ள ஒரு தனிநபருக்கு வழங்கப்படும் மானியம் ஆகும். விக்கிமீடியா நிறுவனம், நிதி வழங்குவதன் மூலம் இது நடைபெறுகிறது.

  • முழு உதவித்தொகை என்பது விமானங்கள், போக்குவரத்து, தங்குமிடம், வரையறுக்கப்பட்ட மருத்துவ காப்பீடு, உணவு மற்றும் பதிவுக் கட்டணங்களை முழுமையாக வழங்குவதாக அமையும்.
  • பகுதி உதவித்தொகையானது தங்குமிடம், உணவு மற்றும் பதிவுக் கட்டணம் ஆகியவற்றை வழங்கும்.

அனைத்து அறிஞர்களுக்கும் மதிய உணவு மற்றும் இரவு உணவு மாநாட்டிற்கு முந்தைய நாள், மாநாட்டு நாட்கள் மற்றும் இறுதி விருந்து ஆகியவை நிகழ்வு நடைபெறும் இடத்தில் வழங்கப்படும். இதற்கிடையில், காலை உணவு தங்கும் விடுதியில் வழங்கப்படும்.

ஆன்லைன் பங்கேற்பாளர்களுக்கு ஆன்லைன் உதவித்தொகை வழங்கப்படாது. உலகெங்கிலும் விக்கிமேனியா தொடர்பான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய விரும்பும் துணை நிறுவனங்கள்க்கு பிரத்தியேகமான விக்கிமேனியா உதவித்தொகை எதுவும் வழங்கப்படாது. (பொது ஆதரவு மானியத்திலிருந்து இது வேறுபட்டுள்ளது. மேலும் தெரிந்துகொள்ள தொடர்புடைய இணை நிகழ்வுகள் நிதி பிரிவையும் பார்க்கவும்.)

Who can apply

யார் விண்ணப்பிக்கலாம்?

கடந்த காலத்தைப் போலவே, விக்கிமீடியாவில் பங்களிப்பு அல்லது செயல்பாடுகளை நிரூபிக்கக்கூடிய எவரும் வரவேற்கப்படுகிறார்கள். உதாரணங்கள் பின்வருமாறு:

  • விக்கிமீடியா குழு அல்லது அமைப்பு (குழு, மையம், அத்தியாயம், கருப்பொருள் அமைப்பு அல்லது பயனர் குழு) ஆகியவற்றில் ஏதாவதொரு வடிவத்தில் ஈடுபாட்டுடன் செயலாற்றுதல் (உறுப்பினராக, உறுப்பினருக்குண்டான கடமைகளை மற்றும் ஆற்றுவதோடல்லாமல்).
  • விக்கிமீடியா நடத்திய நிகழ்வுகளில் பங்களிப்பாளர் (எ. கா. விக்கி நினைவுச்சின்னங்களை நேசிக்கிறது, பயிற்சிப்பட்டறையில் பங்கேற்பாளர்கள்)
  • விக்கிமீடியா திட்ட பங்கேற்பாளர் (எ.கா. GLAM கூட்டு அல்லது பிற கல்வி திட்டங்கள்)
  • விக்கிமீடியா நிகழ்வுகள் அல்லது போட்டிகளின் அமைப்பு (எ. கா. விக்கி நினைவுச்சின்னங்களை நேசிக்கிறது, விக்கி மாரத்தான்)
  • ஒரு காரியஸ்தர், சரிபார்ப்பு பயனர், தன்னார்வலர் மறுமொழிக் குழு உறுப்பினர், இடைமுக நிர்வாகி, நிர்வாகி அல்லது பிற மேம்பட்ட உரிமைகள் வைத்திருப்பவர் (தற்போதைய அல்லது முன்னாள்) ஆக இருத்தல்
  • விக்கிமீடியா நிறுவன மானியதாரர்
  • மீடியாவிக்கி குறியீடு பங்களிப்பாளர், கருவிகள் அல்லது பிற கருவி-உருவாக்க விக்கிமீடியா திட்டங்களுக்காக பங்களிப்பவர்

இருப்பினும் இவை வெறும் உதாரணங்கள் மட்டுமே. விரிவான ஆலோசனை பிரிவுக்குச் சென்று, அட்டவணையில் உள்ள பரிந்துரைகளைப் படித்து, "உங்கள் வழியில்" கேள்விகளுக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள் என்று சிந்தியுங்கள்.

[புதிய] இணை ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள், மற்றும் மையங்கள் மற்றும் பிராந்திய மாநாட்டுக் குழுக்கள் ஆகியோரால் நியமிக்கப்பட்டவர்கள்

  • இணை ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள்: விக்கிமீடியா இயக்கத்தின் இணைப்பாளர்களிடம் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு தனி உதவித்தொகைக்கான ஒதுக்கீடு இருக்கும். அவர்களுடைய விண்ணப்பங்கள் தனியாக தரப்படுத்தப்பட்டு, அவை மட்டுமே ஒன்றோடொன்று போட்டியிடும் வேளையில், தன்னார்வலர்களின் விண்ணப்பங்கள் பிற தன்னார்வலர்களின் விண்ணப்பங்களோடு மட்டுமே போட்டியிடும்.
  • கூடுதலாக பொதுவான உதவித்தொகை ஒதுக்கீடுக்காக, தற்பொழுது ஒழுங்கமைக்கப்பட்ட ஒவ்வொரு விக்கிமீடியா மையம் மற்றும்/அல்லது பிராந்திய மாநாட்டுக் குழு (மையம் இல்லாத நிலையில்) விக்கிமேனியாவில் தங்கள் பிரதிநிதித்துவத்துக்காக 1-3 இடங்களை பெறும். தங்களது சமூகங்களை பற்றிய மையங்களின் இயல்பான புரிதலை பயன்படுத்தி, பிரதிநிதித்துவமில்லாத சமூகத்திலிருந்து ஒரு தன்னார்வலரை அழைப்பதன் மூலமும், ஊதியம் பெறும் ஊழியர், ஒரு நிபுணர், அல்லது வழிநடத்தல் குழு உறுப்பினரை அழைப்பதன் மூலம் பங்கேற்பாளர்களின் பன்முகத்தன்மையை அதிகரிக்க இயலும். உதவித்தொகை முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் இது குறித்து மையங்கள் மற்றும் பிராந்திய நிகழ்வு குழுக்களுடன் தொடர்பு கொள்ளப்படும்.

உங்களுக்கு கேள்விகள் இருந்தால், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் "யார் விண்ணப்பிக்க முடியும்" என்ற பிரிவில் செல்லவும். உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால், தொடர்புகொள்ளவும் / உதவி / எனக்கு இந்தப் பக்கத்தில் பதிலளிக்கப்படாத கேள்விகள் உள்ளன பகுதிக்குச் செல்லவும்.

Advice for filling out the application form

விண்ணப்ப படிவத்தை நிரப்புவதற்கான அறிவுரை

திறந்த அழைப்புகள் "விக்கிமேனியா 2024-க்கு ஒரு பாதை"

விக்கிமேனியாவில் ஆர்வமுள்ள அனைவருக்கும் திறந்த அழைப்புகளை மைய அமைப்பு குழு வழங்கும். வெவ்வேறு நேர மண்டலங்களுக்கு இடமளிக்க நாளின் வெவ்வேறு நேரங்களில் கூட்டங்கள் நடைபெறும்.

நாங்கள் விக்கிமேனியா 2024 பற்றிய பொதுவான புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொள்வோம், உதவித்தொகைக்கு உதவுவோம், மற்ற கேள்விகளுக்கு பதிலளிப்போம். உள்ளே வந்து நிரலாக்கம், உதவித்தொகை, தளவாடங்கள் அல்லது விக்கிமேனியாவுடன் எவ்வாறு ஈடுபடுவது என்பது பற்றி எங்களிடம் கேளுங்கள்.

விரிவான அறிவுரை

  • விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கு சுமார் 45-60 நிமிடங்கள் ஆகும். சமர்ப்பிக்கப்பட்ட பிறகு நீங்கள் விண்ணப்பத்தைத் திருத்த முடியாது. உங்கள் குக்கீகளை அழிக்காவிட்டால் மட்டுமே சமர்ப்பிப்பதற்கு முன்பு அதை நீங்கள் திருத்த முடியும். கவனமாக வரைவு செய்து, நீங்கள் எழுத வேண்டிய அனைத்தையும் எழுதுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தயவுசெய்து ஒரு விண்ணப்பத்தை இரண்டு முறை சமர்ப்பிக்க வேண்டாம்.
  • நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை ஆங்கிலம் அல்லாத வேறு மொழியில் சமர்ப்பிக்கலாம். இருப்பினும், முடிந்தால் ஆங்கிலத்தை கருத்தில் கொள்ளுங்கள். உதவித்தொகை பணிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பேசும் ஒரே மொழி இதுதான். எப்படியும் பயணம் செய்வதற்கும் நிகழ்ச்சியில் தன்னார்வத் தொண்டு செய்வதற்கும் உங்களுக்கு ஆங்கிலத்தில் வேலை செய்யும் நிலை தேவைப்படும் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.
  • குழு முயர்சிகளில் தனிநபர் பங்களிப்புகள் குறித்த நேர்மையான வரையறையை கடைபிடிக்குமாறு நாங்கள் அன்புடன் வேண்டுகிறோம். நிரூபிக்க இயலாத அல்லது உண்மைக்கு மாறான தனிநபர் சாதனை உரிமைகோரல்களை, குறிப்பாக உண்மையில் அவை குழு முயற்சியாக இருந்தால், நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். உங்களது என நீங்கள் உரிமைகோருவதை நாங்கள் சரிபார்க்க அனுமதிக்கும் வகையில் டிஃப், ஒரு விக்கி பக்கம் அல்லது ஒரு சமூக ஊடக இடுகையிலாவது ஒரு இணைப்பை சேர்க்கவும்.
கேள்விகள் மற்றும் அவற்றுக்கு பதிலளிப்பதற்கான பரிந்துரைக்கப்பட்ட அணுகுமுறை
கேள்வி உதவிக்குறிப்பு
பயணம் மற்றும் தொடர்பு விவரங்கள் இந்தப் பகுதியில் உங்கள் பதில்களைத் துல்லியமாக சொல்லுங்கள். நீங்கள் வெற்றிகரமாக பெறுநராக இருந்தால் மட்டுமே உங்கள் கடவுச்சீட்டில் உள்ள தகவல்கள் பற்றிய கூடுதல் கேள்விகள் கோரப்படும்.
மக்கள்தொகையியல் புள்ளிவிவரங்கள் இந்த தகவலை நாங்கள் புள்ளிவிவர நோக்கங்களுடன், உதவித்தொகை விருதுகளில் பன்முகத்தன்மை பிரதிபலிப்பதை உறுதி செய்வதற்காகவே, கோருகிறோம். இந்த தரவுகள் மொத்தமாக மட்டுமே அறிவிக்கப்படும்.
மதிப்பீட்டு கேள்விகள் உங்கள் விண்ணப்பத்தை மதிப்பீடு செய்வதற்கு பின்வரும் கேள்விகள் தாம் முதன்மையான கேள்விகளாகும்.

ஆதரவான இணைப்புகளுடன் நல்ல நுண்ணறிவுகளை படிக்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

ஒரு நபர் உங்களிடம் வந்து "விக்கிமீடியா என்றால் என்ன?" என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்? நீங்கள் வெளியாட்களை விக்கிமீடியாவை சுற்றி எவ்வாறு ஈடுபடுத்துகிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்ள விரும்புகிறோம். விக்கிமீடியாவின் இலக்கு உலகத்திற்கு எதனால் முக்கியமானது? அது எவ்வாறு வேலை செய்கிறது? அவர்கள் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்? ஒரு பத்தியில் பதில் பரிந்துரைக்கப்படுகிறது. முடிந்தவரை உங்கள் சொந்த படைப்புகளை இணைப்புகளுடன் சேர்த்து ஆதரவு குறிப்புகளுடன் அளிக்கவும்.
"திறந்த ஒத்துழைப்பு" என்ற விக்கிமேனியா 2024 உணர்வின் பொருளை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டுள்ளீர்கள்? கொடுக்கப்பட்டிருக்கும் உணர்வை கருத்தில் கொண்டு, உங்களுடைய தனிப்பட்ட எண்ணங்களின் அடிப்படையிலான ஆக்கபூர்வமானதும் நன்கு நியாயப்படுத்தக்கூடியதுமான பதிலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்: இந்த கருப்பொருள் எவ்வாறு விக்கிமீடியாவின் பங்களிப்புகளுடன் எதிரொலிக்கின்றது? உங்களுடைய பணி எவ்வாறு இன்னும் பெரிய திறந்த சுற்றுச்சூழல் அமைப்பை இணைப்பதில் பங்களித்துள்ளது? ஒரு பத்தியில் பதில் பரிந்துரைக்கப்படுகிறது. முடிந்தவரை உங்கள் சொந்த படைப்புகளை இணைப்புகளுடன் சேர்த்து ஆதரவு குறிப்புகளுடன் அளிக்கவும்.
உங்களுடைய அடிப்படை விக்கி அல்லது பரந்த விக்கிமீடியா இயக்கத்தில் உங்கள் சமீபத்திய ஈடுபாடு குறித்து எங்களிடம் கூறுங்கள். உங்களுடைய விக்கி அல்லது சமூகத்தை மேம்படுத்த நீங்கள் என்ன உருவாக்கியுள்ளீர்கள், அல்லது பங்களித்துள்ளீர்கள்? இவைகளில் ஏதேனும் நடவடிக்கைகள் உங்கள் தலைமையிலோ வழிநடத்தலிலோ ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனவா? இந்த நடவடிக்கைகளில் தனிப்பட்ட முறையில் எந்த நடவடிக்கை, அதன் விளைவு எதுவாக இருப்பினும், உங்களுக்கு முக்கியமானது? கடந்த 12 மாதங்களில் இந்த நடவடிக்கைகளில் எவை நடைபெற்றன என்பதை தயவுகூர்ந்து குறிப்பிடுங்கள். இந்த கேள்விக்காக கடந்த 12 மாதங்களின் ஈடுபாடு மற்றும் செயல்பாடுகளை நாங்கள் மதிப்பீடு செய்கிறோம், ஆகவே இவற்றை அடிக்கோடிட்டுக் காட்டும் எண்ணத்துடன் இருக்கவும். தேவைப்பட்டால், நீண்டகாலம்-வரையுள்ள செயல்பாடுகளை அவற்றின் வரலாறு மற்றும் பங்களிப்பு பற்றி நீங்கள் குறிப்பிடலாம். இரண்டு அல்லது மூன்று பத்திகள் வரை விடை பரிந்துரைக்கப்படுகிறது. உங்களது சொந்த படைப்புகளை பற்றிய குறிப்புகளை ஆதரிக்கவும்.
உங்கள் சமூகத்துடன் நீங்கள் வழக்கமாக உங்கள் அனுபவங்களை (அல்லது நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை) எவ்வாறு பகிர்ந்து கொள்வீர்கள்? நீங்கள் விக்கிமேனியா 2024-இல் கற்றுக்கொண்டவற்றை எவ்வாறு பகிர்ந்து கொள்வீர்கள்? விக்கி சுருக்கங்கள், அறிக்கைகள், வலைப்பதிவு இடுகைகள், சந்திப்பு பேச்சுகள், போன்றவற்றின் எடுத்துக்காட்டுகள் இங்கு வரவேற்கப்படுகின்றன. தயவு செய்து எடுத்துக்காட்டுகளுக்கான இணைப்புகளை சேர்க்கவும். விக்கிமேனியா 2024-க்கு பிறகு விக்கிமேனியாவின் அனுபவத்தை பகிர்ந்துகொள்வதற்கான உறுதியான, சரிபார்க்கக்கூடியதான திட்டத்தை நாங்கள் இந்த விடையில் மதிக்கிறோம். சில விளக்கங்கள்/சூழலுடன் கூடிய தோட்டா புள்ளி பட்டியல் இந்த விடைக்கான சிறந்த வடிவமாகும்.

உடனடி மறுப்புக்கான அளவுகோல்

பின்வரும் தோல்வியுற்ற அளவுகோல்களில் ஏதேனும் பொருந்தினால் விண்ணப்பங்கள் முதல் கட்டத்திலேயே தோல்வியடையும்.

  1. விண்ணப்பதாரர் 2019-இல் உதவித்தொகை பெற்றார், ஆயினும் அவரது மாநாட்டுக்கு பிந்தைய அறிக்கையை(களை) முடிக்கவில்லை.
  2. 2023-இல் விண்ணப்பதாரர் உதவித்தொகை பெற்றார், ஆயினும் விக்கிமேனியாவில் அவருக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளை முடிக்கவில்லை.
  3. விண்ணப்பதாரர் எந்தவொரு விக்கிமீடியா நிறுவன மானிய திட்டத்திலிருந்தும் தற்போதைய அல்லது கடந்தகால மானியதாரராக உள்ளார், ஆயினும் இணக்கமல்லாதவர் என்று கண்டறியப்படுகிறார்.
  4. விண்ணப்பதாரர் தற்போது விக்கிமீடியா நிறுவனத்தாலோ அல்லது சமூகத்தாலோ உலகளவில் தடுக்கப்பட்டுள்ளார்.
  5. விண்ணப்பம் காலியாக உள்ளது.
  6. விண்ணப்பத்தில் தலைப்புக்கு அப்பாற்பட்ட அல்லது முறையற்ற உள்ளடக்கம் உள்ளது.
  7. விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்க நியாயமான முயற்சியை மேற்கொள்ள தவறிவிட்டார்.
  8. விண்ணப்பதாரர் உதவித்தொகை வழங்கப்பட தகுதியை பெறுவதற்கான ஏதேனும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளையோ செயல்பாடுகளையோ நிரூபிக்க தவறிவிட்டார்.

முக்கிய அமைப்புக் குழு அறிஞர்களின் இறுதி பட்டியலை முடிவுசெய்ய விக்கிமீடியா நிறுவனத்துடன் மற்றும் சில சந்தர்ப்பங்களில், விக்கிமீடியா மையங்கள் அல்லது துணை அமைப்புகளுடன் ஒத்துழைத்து வருகிறது. சில நபர்களை அவர்களுடைய விக்கிக்குள்ளேயோ, வெளியேயோ ஆன நடத்தையின் காரணமாக வெளியேற்றும் உரிமையை நாங்கள் வைத்துள்ளோம். எடுத்துக்காட்டுகளாவன, உலகளாவிய மற்றும் நிகழ்வு தடைபட்டியலிலுள்ளவர்கள், உலகளாவிய நடத்தை நெறிமுறை (உநநெ)யின் கீழ் தடைசெய்யப்பட்டவர்கள், அல்லது விதி மீறுபவர்கள் என முக்கிய அமைப்புக் குழுவுக்கு மற்ற வழிகளில் தெரியவந்தவர்கள்.

முதற்கட்டத்தில் தோல்வியுறும் அளவுகோல்களுக்குள் பொருந்தாத விண்ணப்பங்கள் மேலும் மதிப்பீட்டுக்காக இரண்டாம் கட்டத்துக்கு அனுப்பப்படும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (அ கே கே)

விக்கிமேனிய 2024 எப்பொழுது, எங்கு நடைபெறும்?

விக்கிமேனியா 2024 கத்தோவித்சே, போலந்தில் 2024 ஆகத்து 7-10 தேதிகளில் நடைபெறும்.

யார் விண்ணப்பிக்கலாம்?

விக்கிமேனியா பங்கேற்ப்பாளர்களுக்கு முதல் முறை மட்டுமே உதவித்தொகை வழங்கப்படுமா?

விக்கிமேனியா அனுபவத்திற்கு பங்களிப்பதற்கான அளவுகோல்களை சிறப்புடன் பூர்த்தி செய்பவர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்களுக்கு நாங்கள் முன்னுரிமை அளிப்போம். நிகழ்வுக்குப் பிறகு விண்ணப்பதாரர்களின் பணிக்கான பங்களிப்புகளை உதவித்தொகை எவ்வாறு மேம்படுத்தும் என்பதை நாங்கள் கணக்கிலெடுத்துக் கொள்வோம்.

எனக்கு எந்த இணை அமைப்பிலும் அங்கத்துவம் இல்லை. நான் எப்படி நிதியுதவிக்கு விண்ணப்பிப்பது?

தனிநபர்கள் தங்கள் இணை அமைப்பு உறுப்பினர் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் விண்ணப்பிக்க இயலும்.

நான் விக்கிமீடியா நிறுவனத்தின் ஒரு ஊழியர். நான் விண்ணப்பிக்கலாமா?

  • ஊழியராக அல்ல. முக்கிய அமைப்புக் குழு விக்கிமீடியா நிறுவன ஊழியர்களுக்கு உதவித்தொகை வழங்குவதில்லை. விக்கிமீடியா நிறுவன ஊழியர்கள், விக்கிமீடியா இயக்கக் குழுக்கள் மற்றும் விக்கிமீடியா நிறுவன அறங்காவலர்கள் ஆகியோர்களது பங்கேற்பு விக்கிமீடியா நிறுவனத்தில் உள்ளடங்கியுள்ளது.
  • ஊதியம் பெறும் ஒரு ஊழியர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடிவெடுத்தால், அவர்களது சாதனைகளில் எவை ஒரு ஊழியராக ஒருங்கிணைக்கப்பட்டது, எவை தன்னார்வலர் நேரத்தில் செய்யப்பட்டன என்பதை அவர்கள் தெளிவாக குறிப்பிடுவர் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். தேவைப்படுமாயின் தயவுசெய்து விளக்கமளிக்கவும்.

நான் ஒரு உதவித்தொகை பணிக்குழு உறுப்பினர். நான் விண்ணப்பிக்கலாமா?

ஆம். தன்னார்வலர் உதவித்தொகை மதிப்பாய்வாளர்கள் உதவித்தொகைக்கு தகுதி உள்ளவர்களே. நலன்களில் முரண்பாடு தவிர்க்கப்படுவதற்க்காக, அவர்களது விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்யும் பொறுப்பு முக்கிய அமைப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் கடந்தகால விக்கிமேனியா உதவித்தொகை மதிப்பாளர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்படும்.

விக்கிமேனியாவில் நேரில் கலந்துகொள்ள என்னால் இயலாவிட்டால், நான் எவ்வாறு கலந்துகொள்வது?

இது ஒரு கலப்பின நிகழ்வாக இருப்பதற்கான கூறுகளை கொண்டிருப்பதால் மெய்நிகராக சேரும் விருப்பம் ஒன்று இருக்கும்.

நீங்கள் ஒரு பார்வையிடும் விருந்து, அல்லது செயல்பாடுகளுடன் ஒரு உள்ளூர் நிகழ்வு, அல்லது விக்கிமேனியாவின் நிகழ்ச்சியில் பங்கேற்ப்பதை மையப்படுத்தி உங்கள் நிகழ்வை உருவாக்கலாம். இந்த ஆண்டு விக்கிமேனியா மானிய நிதியிலிருந்து துணை அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் விக்கிமேனியா-தொடர்பான நிகழ்வுகளுக்கு நாங்கள் நிதியளிக்க மாட்டோம் எனினும் வழக்கமான செயல்முறையை பின்பற்றி சந்திப்புக்கான நிதியை கோரலாம்.

நிதியுதவியின் வரம்பு என்ன?

டாலர் தொகை அல்லது மதிப்பு எதுவும் இல்லை. அனைத்து பிராந்தியங்களிலும் சீரான ஒரு தேர்வு செயல்முறை இருக்கும்.

செயல்முறை என்ன?

விக்கிமேனியா 2024 உதவித்தொகை விண்ணப்பம் எப்போது திறக்கப்படும், முடிவடையும்?

விண்ணப்பங்கள் கட்டமானது புவியில் எங்கும்நவம்பர் 15 அன்று திறக்கப்பட்டு திசம்பர் 18 2023 அன்று மூடப்படும். இது பசிபிக்கில்ஹவ்லேண்ட் மற்றும் பேக்கர் தீவுகளில் நள்ளிரவு ஆகும், மற்றும் ஒருங்கிணைந்த உலகளாவிய நேரப்படி (UTC) அடுத்த நாள் 12:00 மணியாகும். உங்கள் நேர மண்டலத்தின்படி இது எந்த நேரமாக மாறுகின்றது என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.

காலக்கெடுவுக்கு பிறகு நான் உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாமா?

கூடாது. இறுதி முடிவு அறிக்கைகள் சரியான நேரத்தில் மற்றும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நியாயமான முறையில் வெளியிடுவதை உறுதி செய்வதற்க்கே இது. காலக்கெடு தவறவிடுவதை தவிர்க்க விண்ணப்பங்களை காலக்கெடுவுக்கு சில நாட்கள் முன்பே சமர்ப்பிக்க நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

விக்கிமேனியா உதவித்தொகைக்கான செயல்முறை என்ன?

பொதுவாக, நிதி முடிவுகளுக்கான பணிப்பாய்வு படிப்படியாக பின்வருமாறு முன்னேறும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

  1. தனிநபர்கள் லைம்சர்வே வாயிலாக விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கின்றனர்.
  2. தகுதிக்கான உதவித்தொகைகள் பணிக்குழு மதிப்பீடுகள் (மேலே விவரிக்கப்பட்டுள்ள கட்டம் 1)
  3. உதவித்தொகை பணிக்குழு விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்து முடிவுகளை எடுக்கின்றது (மேலே விவரிக்கப்பட்டுள்ள கட்டம் 2)
  4. முடிவுகள் தனிநபர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, விக்கிமீடியா நிறுவனம் போக்குவரத்து மற்றும் தங்குமிடத்தை முன்பதிவு செய்ய உதவும் வகையில் தகவல்கள் கோரப்படுகின்றன.
  5. விக்கிமீடியா நிறுவனம் போக்குவரத்து மற்றும் தங்குமிடத்தை முன்பதிவு செய்து உறுதிப்படுத்துகிறது.

விண்ணப்ப சமர்ப்பிப்பு கட்டத்துக்கு பின்னர் என்ன நடக்கும்?

சமர்ப்பிப்புகள் எப்போது மதிப்பாய்வு செய்யப்படும்?

சமர்ப்பிப்புகள் உதவித்தொகை பணிக்குழுவால் தொடர்முறையில் மதிப்பாய்வு செய்யப்படும்.

உதவித்தொகை எவ்வாறு மதிப்பாய்வு செய்யப்பட்டு வழங்கப்படும்?

பொருத்தமான விடை அளிக்கவும் அதற்கேறப லைம்சர்வேயில் இணைக்கவும் நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். அனைத்து ஆய்வுகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, அனைத்து தரவுகளும் சேகரிக்கப்பட்டவுடன், உதவித்தொகை பணிக்குழு எந்தெந்த நபர்கள் அறிஞர்களாக மாறுவர் என்பதை கூட்டாக முடிவுசெய்யும்.

எனது உதவித்தொகை விண்ணப்பத்தை பற்றிய கருத்துக்களை நான் எப்பொழுது பெறுவேன்?

சலுகைகள் [TBD]இல் வெளிவரத் துவங்கும். அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அவரவர் முடிவு பற்றி விரைவில் தெரிவிக்கப்படும். சிலரின் சூழ்நிலைகள் அவர்கள் ஏற்பதை தடுக்கக்கூடும் ஆதலால் இதற்கு ஓரிரண்டு வாரங்களாகலாம். மற்ற விண்ணப்பதாரர்கள், அவ்வாறு விருப்பம் தெரிவித்திருந்தால் அவர்களுடைய துணை அமைப்புகளுக்கு பரிந்துரைக்கப்படுவர்.

உதவித்தொகை விண்ணப்பதாரர்கள் பற்றிய முடிவுகள் எவ்வாறு தெரிவிக்கப்படும்?

விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்க விண்ணப்பத்தில் வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை நாங்கள் பயன்படுத்துவோம். முடிவு எவ்வாறாயினும், ஒரு கட்டத்தில் அனைத்து விண்ணப்பதாரர்களும் தொடர்பு கொள்ளப்படுவர். விண்ணப்பப் படிவத்தில் செயலில் உள்ள உங்களுடைய மின்னஞ்சல் முகவரியையோ, அல்லது உங்களது செயலில் உள்ள பயனர் பெயரையோ வழங்குமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்.

நான் ஒரு உதவித்தொகையை பெற்றேன் / பெறவில்லை, மற்றும் ...

அறிக்கையிடுவதற்கான தேவைகள் என்ன?

அறிக்கையிடுவதற்கு பதிலாக, நாங்கள் அறிஞர்களை நிகழ்வுகளில் தன்னார்வத் தொண்டு செய்து ஆதரிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

எனது உதவித்தொகையை வேறு யாருக்காவது நான் வழங்க முடியுமா?

முடியாது. சமத்துவம் அளிப்பதற்காக, உதவித்தொகை குறிப்பிட்டதொரு தகுதிக்கு மதிப்பாய்வு செய்யப்பட்டது. ஒரு பெறுநர் அதை மறுப்பதை உறுதி செய்தால், நாங்கள் அதை மதிப்பாய்வு வரிசையில் உள்ள அடுத்த நபருக்கு வழங்குவோம்.

இந்த ஆண்டுக்கான உதவித்தொகையை நான் மறுத்தால், அடுத்த ஆண்டுக்கான விக்கிமேனியாவுக்கு அதை நான் மாற்ற இயலுமா?

முடியாது. ஒவ்வொரு ஆண்டும் விக்கிமேனியா குறிப்பிட்ட சில பிராந்தியங்களில் உள்ள முக்கிய அமைப்புக் குழுக்களின் பரிசீலனையின் கீழ் வெவ்வேறு கருப்பொருள்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. அடுத்த ஆண்டுக்கு மீண்டும் விண்ணப்பிக்க நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம், ஆனால் எங்களது மறுஆய்வு செயல்பாட்டில் உங்கள் தொடர்ச்சியான மதிப்புமிக்க பங்களிப்பை கருத்தில் கொள்வதை நாங்கள் உறுதி செய்வோம்.

எனக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை என்றால், எனது விண்ணப்பத்தை மீண்டும் மதிப்பாய்வு செய்யுமாறு உதவித்தொகைக் குழுவிடம் நான் கேட்க முடியுமா?

முடியாது. எங்கள் மறுஆய்வு செயல்முறை பல நுணுக்கமான படிகளை உள்ளடக்கியது, ஆக வருந்தத்தக்க வகையில், அதை ஒரு முறை மட்டுமே முடிக்க முடியும்.

நான் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தேன், ஆனால் அது கிடைக்கவில்லை. இப்பொழுது நான் என்ன செய்வது?

விக்கிமேனியாவில் கலந்துகொள்ள உதவித்தொகை பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை; உங்களுடைய சொந்த செலவுகளை நீங்களே ஈடுகட்ட இயலும் வரை நீங்களும் கலந்துகொள்ள பதிவு செய்யலாம்.

உங்களால் சொந்த செலவுகளை ஈடுசெய்ய இயலாவிடில், உங்கள் பிராந்தியத்திலுள்ள துணை அமைப்புடன் தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் உங்களை அழுத்தமாக ஊக்குவிக்கிறோம். அவர்கள் தங்களின் சொந்த உதவித்தொகை திட்டத்தை நடத்தக்கூடும், அல்லது உள்ளூர் நிகழ்வை நடத்தலாம்.

தொடர்பு / உதவி / இந்த பக்கத்தில் பதிலளிக்கப்படாத கேள்விகள் என்னிடம் உள்ளன

  • பார்க்கவும் திறந்த அழைப்புகள் "விக்கிமேனியா 2024-க்கு ஒரு பாதை"
  • நீங்கள் wikimania(_AT_)wikimedia.org-க்கு மின்னஞ்சல் செய்தியையும் எழுதலாம்.
  • எங்கள் உதவி பின்வருபவையை உள்ளடக்கும்.
    • சமர்ப்பிப்புகள் தொடர்பான கேள்விகளை தெளிவுபடுத்துதல்
    • விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வேளையில் செய்ய வேண்டியவை, மற்றும் செய்யக்கூடாதவை
    • விண்ணப்பத்தை ச்மர்ப்பிக்கும் போது ஏற்படும் சிக்கல்கள்
    • சமர்ப்பிப்புகளுக்கு பிறகு அடுத்த நடவடிக்கைகள்
    • எனக்கு நிதி கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?
  • முடியுமானால், தயவுசெய்து சமூக ஊடகங்களில் எங்களுக்கு கேள்விகளை அனுப்ப வேண்டாம் - என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் - பேஸ்புக், எக்ஸ் (முன்பு ட்விட்டர்), போன்றவற்றிலுள்ள சுயவிவரங்களை நாங்கள் உங்களை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க பயன்படுத்துகிறோம், ஆனால் அவர்களின் உட்பெட்டிகளை நாங்கள் அடிக்கடி சரிபார்ப்பதில்லை.

சம்பந்தப்பட்ட இணைப்பு நிகழ்வுகள் நிதி

(கடந்த வருடம், இது செயற்கைக்கோள் நிகழ்வுகள் என்று அழைக்கப்பட்டது)

விக்கிமீடியா துணை அமைப்புகள் விக்கிமீடியா நிறுவனம் பொது ஆதரவு நிதி (பொஆநி) வழியாக ஏற்கனவே பெற்ற நிதியை உபயோகித்து உள்ளூரில் ஒரு விக்கிமேனியா-தொடர்பான நிகழ்வை நடத்தலாம், அப்பேற்பட்ட நிகழ்வு அவர்கள் சமர்ப்பித்த பொஆநி முன்மொழிவில் முன்னதாக சேர்க்கப்பட்டிருக்கவில்லை என்றாலும் கூட. பொஆநி மானியதாரர்களுக்கு தேவைக்கேற்ப நிதியை தங்கள் பட்ஜட்டுக்குள் நகர்த்தும் திறன் உள்ளது, மற்றும், பொது ஆதரவு நிதி உடன்படிக்கையின்படி, அசல் திட்டத்திலிருந்து 20 சதவீதத்துக்கும் அதிகமாக மாறுபாடு இருந்தால் அதுபற்றி நிரல் அலுவலர்கள் அறிவிக்கப்படவேண்டும் என்று மட்டுமே நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

விக்கிமேனியா தொடர்பான நிகழ்வை நடத்துவதில் ஆர்வமுடைய அனைத்து துணை அமைப்புகளும் தங்கள் நிகழ்வு விவரங்களை சம்பந்தப்பட்ட துணை நிகழ்வுகள் துணைபக்கத்தில் பட்டியலிட ஊக்குவிக்கிறோம், இதனால் துணை அமைப்புகள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து, விக்கிமீடியர்களிடையே ஒருங்கிணைப்பையும் தொடர்பையும் ஊக்கமூட்டி அவர்களது நிகழ்வுகளை மேலும் சிறப்பாக ஊக்குவிக்கவும் இயலும்.

  • விக்கிமேனியாவில் நேரடியாக ஒளிபரப்ப விரும்பும் இணை அமைப்புகள் தங்கள் நிகழ்வின் விவரங்களை பெற்றவுடன் [[wikimania(_AT_)wikimedia.org|நிரல் பணிக்குழு]]வுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
  • முக்கிய அமைப்புக் குழு விக்கிமேனியாவில் நேரடியாக ஒளிபரப்ப விரும்பும் குழுக்களுக்கு தொழில்நுட்ப ஆதரவை அளிக்கும்.
  • கருத்துக்களை பற்றி விவாதிக்க தயவுசெய்து பேச்சு பக்கம் பயன்படுத்தவும்.

References