பதிவு செய்தல்
விக்கிமேனியா 2022-டைப் பற்றி
விக்கிமேனியா என்பது விக்கிமீடியா இயக்கத்தின் தன்னார்வத் தொண்டர் சமூகத்தால் சாத்தியமான அனைத்து இலவச மற்றும் திறந்த அறிவுத் திட்டங்களைக் கொண்டாடும் வருடாந்திர மாநாடு. இந்த ஆண்டின் விக்கிமேனியா ஆகஸ்ட் 11 முதல் 14 வரை விக்கிமீடியன்களை ஒன்றாக சேர்க்கிறது உருவாக்கவும், கொண்டாடவும், இணைக்கவும், மெய்நிகராகவும் நேரடியாக தனிப்பட்ட முறையில் இணைய வழி செய்கிறது. இது நான்கு நாட்கள் நடைபெறக்கூடிய கூட்டம், கலந்துரையாடல்கள், சந்திப்புகள், பயிற்சிகள் மற்றும் பட்டறைகள் ஆகியவை இருக்கும். இது சிக்கல்களைப் பற்றி விவாதிக்க, புதிய திட்டங்கள் மற்றும் அணுகுமுறைகளைப் பற்றிய அறிக்கை மற்றும் கருத்துகளையும், ஆலோசனைகளைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் அமையும்.
இந்த ஆண்டு மெய்நிகர் விக்கிமேனியாவின் தலைப்பு “திருவிழா பதிப்பு”. திட்டங்கள் மற்றும் இயக்கக் குழுக்களை முன்னிலைப்படுத்தவும், நமது பரந்த சமூகத்தின் பன்முகத்தன்மையைக் கொண்டாடவும் நாம் ஒன்று கூடுவோம். விக்கிமேனியா: திருவிழா பதிப்பு! இதை மூன்று வார்த்தைகளில் சுருக்கமாக கூற வேண்டுமானால்: இது வேடிக்கையாக, உயிருடன், மற்றும் துடிப்பானதாக இருக்கும்; இது பிராந்தியமாக இருக்கும், விழாக்கள் மூலம் இயக்கம் முழுவதும் உள்ள சமூகங்களுக்கு வெளிச்சத்தை அளிப்போம்; மேலும் இது புதிய பயனர்களை வரவேற்கும், முதல் முறையாக பங்கேற்பவர்களுக்கு ஒளிரும் மற்றும் ஊக்கமளிக்கும் பாதுகாப்பான இடத்தை உருவாக்குவோம்.
பதிவு செய்யுங்கள்!
மெய்நிகர் விக்கிமேனியாவிற்கான பதிவு ஆகஸ்ட் 14, 2022 இறுதி வரை நடைபெறும். உள்ளூர் நேரிடை நிகழ்வுகள் அவற்றின் சொந்த பதிவு செயல்முறைகளைக் கொண்டு நடைபெறும்.
நாங்கள் விக்கிமேனியா 2022-ஐ உங்களுக்குக் கொண்டு வர சேவை வழங்குநர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். மேலும் தகவலுக்கு விக்கிமேனியா 2022 தனியுரிமை அறிக்கை-யை வாசிக்கவும்.